இங்கு குப்பைகளை கொட்ட கூடாது.. மீறினால் செய்வினை செய்யப்படும் என்கிற எச்சரிக்கை பலகை சமூகவலைத்தளங்க்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் குப்பைகள் நகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு அகற்றப்படு வரும் நிலையில், பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி வருவது காலம் காலமாக நட…
இங்கு குப்பைகளை கொட்ட கூடாது.. மீறினால் செய்வினை செய்யப்படும் என்கிற எச்சரிக்கை பலகை சமூகவலைத்தளங்க்களில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் குப்பைகள் நகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு அகற்றப்படு வரும் நிலையில், பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.
இங்கே குப்பைகளை கொட்டாதீர்கள் என நகராட்சி சார்பாக போர்டு வைத்தாலும் கூட அதை யாரும் பொருட்படுத்தவதில்லை. குப்பைகளை கொட்ட கூடாது.. மீறினால் செய்வினை.. இந்நிலையில்தான், சிவகங்கையில் குப்பைகளை கொட்டக் கூடாது என ஒருவர் வைத்த போர்ட் தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவகங்கை இளையான்குடி பாரதியார் தெருவில் ‘இங்கு குப்பைகளை கொட்ட கூடாது.. மீறினால் செய்வினை செய்யப்படும்; என்கிற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இது நகராட்சி சார்பில் வைத்திருக்க வாய்ப்பில்லை ,எனவே தனி நபர்தான் இதை வைத்திருக்க வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள்..
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அந்த நபர் அப்படி அங்கு எச்சரிக்கை பலகை வைத்தும் பலரும் அதை பொறுப்படுத்தாமல் குப்பையை வீசி செல்வதாக கூறப்படுகின்றது.

