குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த இளைஞர் பன்னலை பகுதியைச் சேர்ந்த இளம்…
குருநாகல் மாவட்டம், பன்னலை பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரிதிகமை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த இளைஞர் பன்னலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பின்னர் அவர் மனைவியின் வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு முச்சக்கரவண்டியில் வந்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத மூவர், குறித்த இளைஞர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தனிப்பட்ட பகை, குடும்பத் தகராறு அல்லது காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

