குடிநீர் விநியோகம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். கடுவலை பகுதியில், பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் என்ற போர்வையில், மிக இரகசியமாக நடத்தப்பட்டு வந்த மதுபான உற்பத்…
குடிநீர் விநியோகம் என்ற போர்வையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கடுவலை பகுதியில், பதிவு செய்யப்பட்ட குடிநீர் விநியோகம் என்ற போர்வையில், மிக இரகசியமாக நடத்தப்பட்டு வந்த மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று தொடர்பான தகவல், மேல் மாகாண வட பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது.மேலதிக விசாரணை அதனையடுத்து குறித்த குடிநீர் விநியோகத நிலையத்தை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர்.
வெளிப்பார்வைக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்களைத் தயாரித்து விநியோகிக்கும் நிறுவனம் போலக் காட்சியளித்த அந்த வளாகத்துக்குள், சட்டவிரோதமான முறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு வந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சோதனையின்போது 18,500க்கும் மேற்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், குறித்த நிலையத்தில் இருந்த 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

