குருநாகல் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் நேற்று (02) இரவு குடும்பத் தகராறு காரணமாக 58 வயதுடைய ஒருவர் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.பொலிஸார் மேலதிக விசாரணைஉயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஆத…
குருநாகல் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்விட்ட பகுதியில் நேற்று (02) இரவு குடும்பத் தகராறு காரணமாக 58 வயதுடைய ஒருவர் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.பொலிஸார் மேலதிக விசாரணைஉயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த சகோதரர் தடியால் தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து, வெல்லவ பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உயிரிழந்தவரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

