லெபனான் ஜனாதிபதி – அமெரிக்க தளபதி சந்திப்பு: எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவுன் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிர…
லெபனான் ஜனாதிபதி – அமெரிக்க தளபதி சந்திப்பு: எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவுன் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வொஷிங்டனில் நடைபெற்ற லெபனான்-அமெரிக்க-இஸ்ரேலிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த முன்னேற்பாடுகள் தொடர்பாக இரு தரப்பும் கலந்துரையாடியதாக லெபனான் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
லெபனானின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காட்டி வரும் ஆர்வம் குறித்து அட்மிரல் கூப்பருக்கு, ஜனாதிபதி ஜோசப் ஆவுன் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தெற்கு எல்லை வரை லெபனான் ஆயுதப்படையின் அதிகாரத்தை நிலைநாட்ட அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இருப்பினும், இஸ்ரேல் கோருவது போன்று, ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைந்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் லெபனான் இராணுவத்தின் திறன் குறித்த கேள்விகள் தொடர்ந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன.

