லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறப் போவதில்லை என அறிவித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் அமைத்துள்ள "பாதுகாப்பு வலயங்களில்" இருந்து மறு அறிவிப்பு வரும் வரை படைகள் பின்வாங்காது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ…
லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறப் போவதில்லை என அறிவித்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் அமைத்துள்ள "பாதுகாப்பு வலயங்களில்" இருந்து மறு அறிவிப்பு வரும் வரை படைகள் பின்வாங்காது என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதி தீவிரவாத அமைப்புகளிடமிருந்து இஸ்ரேல் மக்களையும் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் சமூகங்களையும் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தப் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து தக்கவைக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.2006-ஆம் ஆண்டு லெபனானில் நடைபெற்ற போரில் உயிரிழந்த இஸ்ரேல் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வில் உரையாற்றிய அவர், பாதுகாப்பு வலயங்களில் இருந்து எங்கள் படைகள் பின்வாங்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் இஸ்ரேலின் தெற்கு லெபனான் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி தாக்குதல் நடத்த முயன்றால், அதற்கு "முழு வலிமையுடன் பதிலடி கொடுக்கப்படும்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையில், பிரதமர் பெஜ்சமின் நெட்டன்யாஹூ உள்ளிட்ட இஸ்ரேல் தலைவர்கள், லெபனானில் இருந்து படைகளை திரும்பப் பெறும் வாய்ப்பை மீண்டும் நிராகரித்துள்ளனர். ஹிஸ்புல்லாஹ் இயக்கம் ஆயுதங்களை முழுமையாக கைவிட்ட பின்னரே படைகள் வெளியேறும் நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். லெபனானில் இஸ்ரேல் படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. காசா பகுதியில் தற்போது சுமார் 70 சதவீத நிலப்பரப்பு இஸ்ரேல் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

