லொறி விபத்து : மூவர் வைத்தியசாலையில் அனுமதி! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசா…

லொறி விபத்து : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

கொழும்பு கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிச் பயணித்த லொறி பிரதான வீதியிலிருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள கலுகல சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 5:30 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொல்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்தில் லொறி பலத்த சேதமடைந்ததாகவும் தெரிவித்தனர்.