நுவரெலியா நகரில் பிரதான வீதியொன்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள வடிகால் அல்லது குழி, பல நாட்களாக மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. திறந்த நிலையில் உள்ள இந்த வடிகாலில் மழைநீர் தேங்கி நிற்பதால், டெங்கு உள்ள…

நுவரெலியா நகரில் பிரதான வீதியொன்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள வடிகால் அல்லது குழி, பல நாட்களாக மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

திறந்த நிலையில் உள்ள இந்த வடிகாலில் மழைநீர் தேங்கி நிற்பதால், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இப்பாதை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எதிர்பாராத விபத்துகளுக்கு உள்ளாகும் அபாயம் நீடிக்கிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மையால் இந்தத் திறந்த குழி மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நுவரெலியா மாநகர சபை உடனடியாக இந்த இடத்தைப் பார்வையிட்டு, விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் உரிய நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.