அரசாங்க நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு விசேட முன்னுரிமை அட்டையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்ற மா…
அரசாங்க நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒரு விசேட முன்னுரிமை அட்டையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை, நேற்று (30) அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இந்தத் திட்டத்தின் முன்னோட்டத் திட்டம் கடுவெல பிரதேச செயலகத்தின் தலைமையில் செயல்படுத்தப்பட உள்ளது.சுற்றறிக்கை
மாற்றுத்திறனாளிகளின் அங்கவீன நிலைமைகளை வகைப்படுத்துவது குறித்த சுற்றறிக்கையை வெளியிடவும் சபை ஒப்புக்கொண்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய பதங்கள் குறித்து அலுவல் மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து ஒரு பிரசுரத்தை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நபர்களை மதிப்பிடுவதற்கான அவசியமான அளவுகோல்களை வகுப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அமைச்சின் செயலாளரும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபையின் செயலாளருமான சம்பத் மந்திரிநாயக்கஇ மேலதிக செயலாளர் நாலிகா பியசேன, சமூக சேவைகள் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன மற்றும் சபையின் ஏனைய அங்கத்தவர்களும் இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

