செய்திகள் 30 November 2025 மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்து காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடல் செய்திகள் 30 November 2025 மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள…

செய்திகள்

30 November 2025

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்து காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடல்

செய்திகள்

30 November 2025

மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள அதிக நீர்வரத்து காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இன்று (30) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்கள் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி இருக்கின்றது. குறிப்பாக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக குளக்கட்டுகள் மற்றும் வரம்புகள் சேதமடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டும் உடைப்பெடுத்து இருப்பதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவது தொடர்பாகவும், அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பது தொடர்பாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார்.