இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக மக்களின் உண்மையான வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்றும், மக்களிடமிருந்து வரியாகப் பெறப்படும் பணமே மீண்டும் கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்த…

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக மக்களின் உண்மையான வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்றும், மக்களிடமிருந்து வரியாகப் பெறப்படும் பணமே மீண்டும் கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம்(28.06.2026) நடைப்பெற்ற கேகாலை மாவட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரச கொடுப்பனவுகள்அவர்  மேலும் உரையாற்றுகையில், அஸ்வெசும, முதியோர் கொடுப்பனவு மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்பட்டவை அல்ல. இல்லாத ஒரு நிதியை அல்லது இருந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட பணத்தையே அரசு மக்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது. சுருக்கமாகக் கூறின், உங்களுக்கே வரி விதித்து, அந்தப் பணத்தையே உங்களுக்கே திரும்பக் கொடுத்துள்ளார்கள்.நாட்டில் புதிய செல்வம் எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதை அரசால் சவாலுக்கு உட்படுத்த முடியாது.

மொத்த தேசிய உற்பத்தி, முதன்மைக் கணக்கு இருப்பு, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் போன்ற பேரியல் பொருளாதாரம் சார்ந்த கருத்துருக்களைக் காட்டி அரசு தனது பொருளாதாரப் பொய்களை நியாயப்படுத்த முயல்கின்றது. ஆனால், பொருளாதார அறிவியலிலேயே இவை வெறும் தரவுகள் மட்டுமே தவிர, உண்மையான நிலைமை அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதாரம் உண்மையான பொருளாதாரம் என்பது தரவுகளில் இல்லை. அது நிலப்பரப்பிலும், உங்கள் வீடுகளிலும், உங்களின் பைக்கற்றுக்களிலும், நீங்கள் வேலை செய்யும் இடங்களிலுமே காணப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தை ஒரு பெரிய பூதமாகக் காட்டி, மக்கள் மீது விதிக்கக்கூடிய அனைத்து வரிகளையும் விதித்து, அதிகரிக்கக்கூடிய அனைத்துக் கட்டணங்களையும் அரசு அதிகரித்துள்ளது.சுங்க வருமானம் திடீரென அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றார்கள். நாம் பெரிய அளவில் ஏற்றுமதி வணிகத்தை மேம்படுத்தி இந்த வருமானத்தைப் பெறவில்லை, மக்களிடமிருந்தே இது வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொருளாதாரம் முற்றிலும் சுருங்கி, வணிகங்கள் இயங்காமல், மக்களின் கைகளில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்களின் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக மக்களைச் சுரண்டி, தங்களின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதே இவர்களின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.