நாட்டின் சில மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மத்திய மலைநாட்டு பல பகுதிகள் பனியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் , சாரதிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மலையகத்தின் பல பகுதிகளில் இடைவிடாது கன…
நாட்டின் சில மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மத்திய மலைநாட்டு பல பகுதிகள் பனியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் , சாரதிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மலையகத்தின் பல பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருவதாகவும், தொடர்ந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதற்கமைய, கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.
அதேபோன்று, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளையார், தலவாக்கலை, லிந்துலை, ரதல்ல, நனுஓயா மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளிலும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் வாகன போக்குவரத்து சிரமத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த வீதிகளை பயன்படுத்தும் அனைத்து வாகன சாரதிகளும் அதிகபட்ச அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வாகனங்களின் முகப்பு விளக்குகளை கட்டாயம் ஒளிரச் செய்தவாறும், தமக்குரிய வீதிப்பக்கத்தில் மட்டுமே பயணிக்கவும், வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், வளைவுகள் மற்றும் மலைச்சரிவு பகுதிகளில் முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

