14 வயது மகளை சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு, மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தந்தை லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தர்மபுரி கோட்டை கோவில் அருகே உள்ள டி.என்.வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த…

14 வயது மகளை சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு, மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தந்தை லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தர்மபுரி கோட்டை கோவில் அருகே உள்ள டி.என்.வி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு  மனைவியும் 14 வயது மகளும் உண்டு. இதில் மகள் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.பொலிஸார் விசாரணை இந்நிலையில்தான், சாத்விகாவை  பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்த சந்தோஷ் சுத்தியால் அடித்து கொலை செய்திருக்கிறார். மனைவியை கழுத்தை நெரித்தும், சுவற்றில் மோதியும் கொலை செய்திருக்கிறார்.அதன்பின் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தர்மபுரி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று அந்த பக்கம் வந்த லாரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என பொலிஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.