தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தாம் வசித்த வீட்டைத் தீ வைத்து எரித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(29.06.2026) கொழும்புக்கு அருகே மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் சாகர மாவத்தையில் வசித்து வந்த ஒரு தம்பதி…

தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தாம் வசித்த வீட்டைத் தீ வைத்து எரித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(29.06.2026) கொழும்புக்கு அருகே மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் சாகர மாவத்தையில் வசித்து வந்த ஒரு தம்பதிக்கு மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினை இதன்போது, மனைவி மீது ஆத்திரமடைந்த கணவர், தாம் வசித்து வந்த இருமாடி வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார்.

குறித்த வீட்டின் மேல் மாடியில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மொரட்டுவை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இரண்டு அறைகள் முற்றாக சேதம் மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு நடவடிக்கையால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் வீட்டின் மேல் மாடியில் அமைந்திருந்த ஒரு அறையும், அதிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த எகொடஉயன பொலிஸார், வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் கணவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.