மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருவிழா இன்று(02.07.2026) மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை…
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
இந்த திருவிழா இன்று(02.07.2026) மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து இந்த திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்துள்ளனர்.
நவநாள் வழிபாடுகள் இந்த நிகழ்வில், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,திணைக்கள தலைவர்கள்,அரசியல் பிரதி நிதிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
திருப்பலியை தொடர்ந்து, திருச்சொரூப பவனியும், திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பல பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை தலைமையில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலை கள் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இடம் பெற்றது.மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கான வேஸ்பர் ஆராதனை நேற்று(01.07.2026) நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று(2) காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலி ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

