மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், உணவகம் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொத…

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், உணவகம் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுப்பு

குறிப்பாக சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல் மற்றும் மிகவும் அசுத்தமான சூழலில் உணவு சமைத்தல், கெட்டுப்போன காய்கறிகள், உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்துதல் மற்றும் கோழி கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்ப்பது, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் பிரித்தறியாது, அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஒன்றாக சேமித்து வைத்தல் உள்ளிட்ட குறைப்பாடுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், சூடான உணவுகளை தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துதல், உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்கள் இன்றி உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளமை, குப்பைத் தொட்டிகளை மூடியின்றி அசுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்டவைகளும் அதில் உள்ளடங்குகின்றன.

இதனைத் தொடர்ந்து, உணவுப் பொருட்கள் அழிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கண்டவாறு சுகாதார விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற உணவு பொருட்களை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடி தடை விதித்துள்ளனர்.

அடுத்து, குறித்த உணவகத்துக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.