வடுரம்பை பிரதேசத்தில் உள்ள இரண்டு பஸ் உரிமையாளர்களின் வீடுகளில், பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 107,000 மில்லி லீட்டர் மண்ணெண்ணெய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பஸ் வண்டிகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி போக்குவரத்து சேவையில்…
வடுரம்பை பிரதேசத்தில் உள்ள இரண்டு பஸ் உரிமையாளர்களின் வீடுகளில், பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 107,000 மில்லி லீட்டர் மண்ணெண்ணெய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பஸ் வண்டிகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமையவே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
டீசலை விட மண்ணெண்ணெய் விலை குறைவாக இருப்பதால், அதிக இலாபம் ஈட்டுவதற்காகவே அவர்கள் இவ்வாறான சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும், மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குவது கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பையும், பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியங்களையும் ஏற்படுத்துவதால், இது தண்டனைக்குரிய சட்டவிரோதச் செயலாகும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

