முதியவர் ஒருவர் மர்மமான முறையில் நேற்று(03.07.2026) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டம் குறைவான வளவு ஒன்றில் குறித்த…

முதியவர் ஒருவர் மர்மமான முறையில் நேற்று(03.07.2026) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி மற்றும் இஸ்மாயில்புரம் ஆகிய இடங்களை இணைக்கும் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள ஆள் நடமாட்டம் குறைவான வளவு ஒன்றில் குறித்த நபர் சடலமாக கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் பழைய வளத்தாப்பிட்டி காளி கோவில் வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைசம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் இவரது மரணத்திற்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் இன்று (ஜூலை 04) காலை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சம்மாந்துறை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.