பொசன் பண்டிகையை முன்னிட்டு, மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் உரிமம் பெற்ற மதுபான நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாகத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
பொசன் பண்டிகையை முன்னிட்டு, மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் உரிமம் பெற்ற மதுபான நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து மதுபான விடுதிகளும் ஜூன் 28-ஆம் திகதி மாலை முதல் ஜூன் 29-ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தில் முழுமையாகவும் மூடப்பட வேண்டும்.கடுமையான சட்ட நடவடிக்கைஇவை ஜூன் 30-ஆம் திகதியே மீண்டும் திறக்கப்பட வேண்டும்.
மேலும், “மிஹிந்தலை, மெதவாச்சிய, நுவரகம்பலாத மத்திய, நுவரகம்பலாத கிழக்கு மற்றும் மஹவிலச்சிய ஆகிய பிரதேசங்களில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும், ஜூன் 25-ஆம் திகதி முதல் ஜூலை 3-ஆம் திகதி வரை அரச பொசன் பண்டிகைக் காலம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட மூடப்பட்ட காலப்பகுதியில், உரிமம் பெற்ற எந்தவொரு மதுபான விற்பனை நிலையமும் இயங்குவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் எச்சரித்துள்ளது.

