மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களை கௌரவிக்கும் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வு நேற்று (27) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார அமைச்சின் பணியாளர் நாயகம் அசேல குணவர்த்தனவும் இந்நிகழ்…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களை கௌரவிக்கும் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வு நேற்று (27) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சின் பணியாளர் நாயகம் அசேல குணவர்த்தனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், சுகாதாரத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அர்ப்பணிப்பான சேவையும், கடந்த 8 ஆண்டுகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பும் பாராட்டப்பட்டன.

இதன்போது பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவரது பதவிக்கால சாதனைகளை பதிவு செய்த சிறப்பு ஆவணப் புத்தகமும் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி. சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி மைத்திலி பாத்லட் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள், வைத்தியசாலை சமூகங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.