மட்டு.வாழைச்சேனையில் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join வாழைச்சேனை லயன்ஸ் கழகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை இணைந்து நடாத்தும் டெங்க…

மட்டு.வாழைச்சேனையில் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

வாழைச்சேனை லயன்ஸ் கழகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை இணைந்து நடாத்தும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வாழைச்சேனை நகரில் லயன்ஸ் கழக ஏற்பாட்டில் இடம் பெற்றது.

டெங்கு நோய் அதிகம் பரவும் 14 மாவட்டங்களுள் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதனை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் விசேட பணிப்புரைக்கு அமைவாக சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்தி நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களான பொது விளையாட்டு மைதானம், வர்த்தக நிலையங்கள், வடிகால்கள் உள்ளிட்ட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், நீர் தேங்கியுள்ள பாத்திரங்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய பொருட்கள் அகற்றப்பட்டன.

அகற்றப்பட்ட பொருட்கள் பிரதேசபை ஊடாக மீழ் சுழற்சிக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு சிரமதான நிகழ்வில் பொதுச் செயலாளர் பரிசோதகர்கள், வாழைச்சேனை லயன்ஸ் கிளப் , உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.