மேல் மாகாணத்தில் டெங்கு அதிகளவில் பதிவாகும் 23 அதிஅவதான வலயங்களை இலக்காகக் கொண்டு நாளை (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மேல் மாகாணத்தில் டெங்கு அதிகளவில் பதிவாகும் 23 அதிஅவதான வலயங்களை இலக்காகக் கொண்டு நாளை (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தில் சுகாதாரப் பிரிவினர், முப்படையினர், பொலிஸார், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரச மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து பங்கேற்கவுள்ளன.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதுடன், மேல் மாகாணத்தின் 23 டெங்கு அதிஅவதான வலயங்களில் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.