திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(06.07.2026) காலை 6.00 மணியளவில் இந்த கோர வி…
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று(06.07.2026) காலை 6.00 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, அவர்களுக்கு எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் இவர்களது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் பலமாக மோதியுள்ளது. இதனால் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.விபத்தில் கந்தளாய் - வான் எல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், மொரவெவ 'டிராக் 6' பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்தனர். இவர்களுடன் பயணித்த இரு மாணவர்களும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.பொலிஸார் மேலதிக விசாரணை
விபத்தையடுத்து காயமடைந்த நால்வரும் உடனடியாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.எனினும், படுகாயமடைந்த இளைஞர் மற்றும் தாயின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தா-ர். இவ்விபத்து குறித்து மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

