உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி மொராக்கோ அணி வரலாற்று வெற்றி பெற்றபோது, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ வெளிப்படுத்திய ரியாக்சன் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் குவாடலூப் ந…
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி மொராக்கோ அணி வரலாற்று வெற்றி பெற்றபோது, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ வெளிப்படுத்திய ரியாக்சன் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் குவாடலூப் நகரில் ஜூன் 30 அன்று நடைபெற்ற இப்போட்டியில் மொராக்கோ வெற்றி பெற்ற தருணத்தில், அங்கிருந்த மற்ற அதிகாரிகள் மற்றும் ரசிகர்கள் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.உலகக் கிண்ண வெற்றி ஆனால், விஐபி கேலரியில் அமர்ந்திருந்த ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ எந்தவொரு உணர்ச்சியுமின்றி, அமைதியாக கைதட்டியபடி அமர்ந்திருந்தார்.🚨🇳🇱🇲🇦FIFA President Gianni Infantino’s reaction when the Moroccan player scored the decisive penalty in the shootout that knocked the Netherlands out of the World Cup. pic.twitter.com/EBQGLsHfCC— The Saviour (@TheSaviour) July 1, 2026 இந்த முக்கிய தருணத்தில் அவரது இத்தகைய மௌனமான மற்றும் சுவாரஸ்யமற்ற எதிர்வினை, அவர் எதனைக் குறிப்பிட விரும்புகிறார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

