முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் புல்மோட்டை முகத்துவாரம் பாலம் நிர்மாணிப்பு வேலைக்காக அடுத்த வருடம் (2026) நிதி ஒதுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களால் இன்றைய தினம் (29) நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவ…

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் புல்மோட்டை முகத்துவாரம் பாலம் நிர்மாணிப்பு வேலைக்காக அடுத்த வருடம் (2026) நிதி ஒதுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க அவர்களால் இன்றைய தினம் (29) நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு. இந்தப் பாலம் நிர்மாணிப்பு தொடர்பான கோரிக்கை தொடர்ச்சியாக மாவட்ட அரசாங்க அதிபரினாலும், மாவட்ட மக்களாலும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த முறை புதுக்குடியிருப்புக்கு வருகைதந்த நாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க அவர்கள் தனதுரையில் கொக்கிளாய் பால வேலைக்கு எதிர்வரும் காலத்தில் நிதி ஒதுக்கப்படும் என்றார். இதன் பிரகாரம் இந்த அறிவிப்பினை இன்றைய தினம் பிரதி அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளமை சிறப்பான விடயமாகும். இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படும் என்றால் மாவட்ட மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.