கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்புத் தொடர்பில் நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று ( 3) கைக்குண்டை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த…

கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்புத் தொடர்பில் நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று ( 3) கைக்குண்டை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு நேற்று (02) மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த மயானத்திற்கு சம்பவதினமான நேற்று நபரொருவர் அங்கு கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்துள்ளனர்.