தென்கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் தென்கொரியத் தூதுவருமான ஜொங்-மூன் சோய், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பானது நேற்றுமுன்தினம்(27.06.2026) இடம…

தென்கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் தென்கொரியத் தூதுவருமான ஜொங்-மூன் சோய், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பானது நேற்றுமுன்தினம்(27.06.2026) இடம்பெற்றுள்ளது. தென்கொரிய முதலீட்டு வாய்ப்புகள் இந்தச் சந்திப்பின் போது, ஆசிய நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள "ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு" குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.நம்பிக்கையான, பாதுகாப்பான மற்றும் நிலையான ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கான வாழ்த்துக்களை இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிர்ந்து கொண்டார்.

மேலும், தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் பிராந்திய நாடுகளில் தென்கொரிய முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், புதிய ஆசிய முன்முயற்சிகளுக்காக ஜொங்-மூன் சோய் ஆற்றிய பங்களிப்பையும், அவரது இந்த உத்தியோகபூர்வ சந்திப்பையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.