ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீ…
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னரே, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படைக்கு நிறைவேற்றுப் பிரிவு அதிகாரியாக உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்திராத யோஷித ராஜபக்ஷவை இணைத்துக்கொண்டமை மற்றும் அதுவரை காணப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியின் பயிற்சிப் பாடநெறி ஒன்றிற்காக அரசாங்கப் பணத்தைச் செலுத்தி யோஷித ராஜபக்ஷவை அதில் பங்கேற்கச் செய்தமை ஆகிய நடவடிக்கைகள் மூலம் ஊழல் புரிந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் கடற்படைத் தளபதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

