முன்னாள் தேசிய லொத்தர் சபை தலைவர் ஷியாமிலா பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join முன்னாள் தேசிய லொத்தர் சபை (NLB) தலைவரும், புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் அ…
முன்னாள் தேசிய லொத்தர் சபை தலைவர் ஷியாமிலா பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
முன்னாள் தேசிய லொத்தர் சபை (NLB) தலைவரும், புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 முதல் 2019 ஆம் ஆண்டுக்கிடையில் தேசிய லொத்தர் சபையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மூன்று பணியாளர்கள், அந்த நிறுவனத்தில் பணியாற்றாமல் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

