மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை இன்று(04.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இரண்டு மாடுகளும் திருடப்பட்…

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை இன்று(04.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இரண்டு மாடுகளும் திருடப்பட்டு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கமைவாக, உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மாடுகளுடன் முச்சக்கர வண்டி சாரதி கைது இதன்போது சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு, குறித்த மாடுகளை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என்றும் மன்னாரில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றி தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் அவருக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.