திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேற்று(02.07.2026) நடைபெற்ற மூதூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது பின்வரும் பிரேரனைகள் முன்வைத்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களில் மூதூரைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்பட…
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நேற்று(02.07.2026) நடைபெற்ற மூதூர் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது பின்வரும் பிரேரனைகள் முன்வைத்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களில் மூதூரைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை, தற்பொழுது அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.அதனை விரைவாக அந்த 35 குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்
டிட்வா புயலினால் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 18 மீன்வாடிகள் சேதமடைந்தன, அவற்றை புனரமைத்து கொடுப்பதற்கு நிதி காணப்படுகின்ற பொழுதும், கரையோரத்தில் கட்டிடம் அமைப்பதற்கு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி வழங்க மறுக்கின்றது.நடவடிக்கைஎனவே, டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீன்வாடிகளை புனரமைப்பு செய்வதற்கு கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொடுக்க வேண்டுகின்றேன்.
தோப்பூர் அல் ஹம்ரா உள்வீதி I Project திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் போக்குவரத்து அமைச்சர் அவர்களினால் ஆரம்பித்தும் வைக்கப்பட்டது ஆனால் இதுவரையும் வேலைகள் நடைபெறவில்லை.ஆகையினால் அவ்வீதி வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தோப்பூர் அல்லைநகர் மேற்கு ஆவியாக்குள வீதி மழைகாலங்களில் தொடர்ச்சியாக நீரில் மூழ்குகின்றது.எனவே வீதி அபிவிருத்தி பணிகளின் போது மேற்படி ஆவியாக்குள வீதி மற்றும் அதனுடனான வடிகானை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரல்.உட்கட்டமைப்பு வசதிகள்
மூதூர் பிரதேச செயலக பகுதிக்கு சொந்தமான தோப்பூர் உல்லைக்கழி பட்டியடி சிறுகடல் கரையோரத்தினை அபிவிருத்தி செய்வதற்கு செலவு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான நிதியும் கிடைக்கவுள்ள நிலையில் தற்பொழுது மறுகரை பகுதியில் அதாவது சேருவிலபிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்படி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு இரகசியமாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிகின்றேன்.எனவே, ஏற்கனவே தீர்மானித்தபடி மூதூர் பிரதேச செயலக பிரிவிற்கு சொந்தமான கரையோரத்தில் மேற்படி வேலைத்திட்டம் மேற்கொள்வதனை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
தோப்பூர் இக்பால் நகர் மீள்குடியேற்ற கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் பூரணப்படுத்தப்படாமையினால் பலர் அங்கு முழுமையாக குடியேறாது உள்ளனர்.எனவே அங்கு வீதிகளை அமைத்து, குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

