தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் (73) நேற்று காலையில் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். கே.பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செ…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் (73) நேற்று காலையில் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். கே.பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.அணி வகுப்பு மரியாதைமேலும் நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன், இயக்கு னர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
திரையுலகிற்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று அரசு சார்பில் 24 பொலிஸ் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அவரது உடலுக்கு காவல் துறையினர் அணி வகுப்பு மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, இறுதி ஊர்வலம் தொடங்கி, பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலியுடன் பெசன்ட் நகர் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டு 74 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

