நாட்டில் திருத்தப்பட்ட வருடாந்த பேருந்து கட்டண உயர்வு இன்று (06) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, பேருந்து கட்டணங்கள் 12% முதல் 20% வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டண திருத்தத்திற்கு கடந்த வாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைய, குறைந்தபட…

நாட்டில் திருத்தப்பட்ட வருடாந்த பேருந்து கட்டண உயர்வு இன்று (06) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, பேருந்து கட்டணங்கள் 12% முதல் 20% வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டண திருத்தத்திற்கு கடந்த வாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அனுமதி வழங்கியிருந்தது. இதற்கமைய, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவிலிருந்து 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சொகுசுப் பேருந்துகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்து சேவைகளுக்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள்

புதிய கட்டண அமைப்பு குறித்து பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப பயணச்சீட்டு இயந்திரங்களை புதுப்பிக்குமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இன்று முதல் நாடளாவிய ரீதியில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இருப்பினும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன கூறுகையில், பயணச்சீட்டு இயந்திரங்களைப் புதுப்பிக்கும் பணியை நிறைவு செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்கள் எடுக்கும் என்று தெரிவித்தார்.