நாட்டில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமையால் நாட்டில் இன்று(04.07.2026) பல மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நிலை இன்று(04) முதல் நாளை(05) 11:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்…
நாட்டில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவக்காற்று நிலைமையால் நாட்டில் இன்று(04.07.2026) பல மாகாணங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நிலை இன்று(04) முதல் நாளை(05) 11:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இதற்கமைய, மத்திய, வட, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள், கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

