நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தின் லஸ்ஸா நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலைக்குள் புகுந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல் சம்பவத்தில் 37 மாணவர்கள் இன்னும் மாயமாகியுள்ளனர்.நேற்றுமுனம்தினம்(29.6.2026) மாணவர்கள் வகுப்பறையில் பரீட…
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தின் லஸ்ஸா நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலைக்குள் புகுந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல் சம்பவத்தில் 37 மாணவர்கள் இன்னும் மாயமாகியுள்ளனர்.நேற்றுமுனம்தினம்(29.6.2026) மாணவர்கள் வகுப்பறையில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தபோது, 'இஸ்லாமிய அரசு மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்' என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தக் கோர சம்பவத்தில் ஒரு இராணுவ வீரர் மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட மொத்தம் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.தாக்குதல் இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய போர்னோ மாகாணக் கல்வி ஆணையர் லவான் அப்பா வாகில்பே, கடத்தப்பட்டவர்களில் 25 மாணவிகள், 11 மாணவர்கள் மற்றும் ஒரு பாடசாலை ஊழியர் என மொத்தம் 37 பேர் இன்னும் பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், பாடசாலையின் பிரதி அதிபர் உட்பட 8 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் தொலைபேசி எண்கள் அடங்கிய பட்டியல் ஊடகவியலாளர்களிடம் பகிரப்பட்டுள்ளது.கடத்தல்கள் நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கப்பம் (பணயத் தொகை) கேட்டு பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கடத்துவது ஆயுதக் குழுக்களின் வழக்கமான உத்தியாக மாறியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு சிபோக் நகரில் போகோ ஹராம் அமைப்பால் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பிறகும், இத்தகைய கொடூரமான பாடசாலை கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

