நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முச்சக்கர வண்டி தொழில் 16 ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அதன் பொதுச்செயலாளர் ல…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முச்சக்கர வண்டி தொழில் 16 ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அதன் பொதுச்செயலாளர் லலித் ரோஹன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.குறைக்கப்பட்ட எரிபொருள் விலைஇலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CBC), நேற்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் ஆட்டோ டீசல் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ஆக்டேன் 92-ன் விலை ரூ. 20 குறைக்கப்பட்டு ரூ. 414 ஆகவும், ஆட்டோ டீசலின் விலை ரூ. 25 குறைக்கப்பட்டு ரூ. 382 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏனைய அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளிலும் மாற்றம் இல்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.