கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வன்னியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். குறித்த நிகழ்வு இன்று(28.06.2026) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார்…

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடனத்தால் உலக சாதனை படைத்துள்ளார். கவிஞர் வன்னியூர் ரஜீவனின் மகளான ரஜீவன் கம்சத்வனி என்ற சிறுமியே 6 வயதுக்குட்பட்ட பிரிவில் இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று(28.06.2026) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றுள்ளது.பரத நாட்டிய உலக சாதனைகுறித்த சிறுமி 2 மணி 30 நிமிடம் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையானது, ராபா உலக சாதனை புத்தகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன், நிகழ்வின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ்வரன்  "உலக நாட்டிய இளவரசி" எனும் மகுடத்தை சூட்டி சிறுமிக்கு சூட்டிவைத்துள்ளார். இந்த நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் யோகதாசன் யூட் நிமலன், ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்குபற்றியுள்ளனர்.