நெல் அறுவடைக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்திப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூட்டு விவசாய அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தால்…

நெல் அறுவடைக்கு நியாயமான விலையை நிர்ணயிக்கக் கோரி விவசாயிகள் முன்னெடுத்துள்ள எதிர்ப்புப் போராட்டம் காரணமாக A9 வீதியின் ரம்பேவ சந்திப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டு விவசாய அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தால் A9 வீதியில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பகுதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், நெல் கையிருப்புகள் தொடர்பாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.

அத்துடன், ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.150 உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து தடையைத் தொடர்ந்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.