நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் தற்போது பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் பலர் நேற்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் தற்போது பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் பலர்
நேற்று (05) மற்றும் இன்று (06) இடம்பெற்ற மோதலில் சம்பவங்களில் 19 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்களாக மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், 23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் இருந்த சி.சி.டி.வி (CCTV) கண்காணிப்பு கெமராக்கள் மற்றும் உடல் பரிசோதனை இயந்திரங்கள் கைதிகளால் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.சிறைச்சாலையின் செயற்பாடுகள் முடக்கம்
சிறைச்சாலையின் செயற்பாடுகளை முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமாக இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வன்முறைக்கு காரணமான சில கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன.

