நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை நடத்துவதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை நடத்துவதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் 1.00 மணியளவில் இந்த மோதல் வெடித்திருந்தது.
விசாரணை கைதிகள் (Remand prisoners) ஒரு தரப்பினருக்கும், தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றொரு தரப்பினருக்கும் இடையே இந்த மோதல் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 34 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

