நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக்கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள், அங்குள்ள நிலைமையைக்கட்டுப்படுத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையாக அகுணகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (05) முதல் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் அமைதியற்ற சூழலைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பலர் உயிரிழப்பு நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 19 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

