நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; கைதிகள் இடம் மாற்றம்! நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, அங்குள்ள கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்…
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; கைதிகள் இடம் மாற்றம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக, அங்குள்ள கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்றும், இருபது பேர் கைதிகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த மோதலில் குறைந்தது 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

