நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையை அடுத்து பெருமளவான கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன் கண்ணீருடன் கதறி அழும் புகைப்படங்க்கள் சமூக வலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில் 100…

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையை அடுத்து பெருமளவான கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன் கண்ணீருடன் கதறி அழும் புகைப்படங்க்கள் சமூக வலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில் 100 இற்கும் மேற்பட்டோர் காமயடைத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீதிகளில் அழுதபடி  நிற்கும் உறவினர்கள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றைச் சிறைவாசி ஒருவர் காட்டிக்கொடுத்ததாகக் கூறப்படும் முறுகல் நிலை நேற்று வன்முறையாக வெடித்த நிலையில் நள்ளிரவில் அதிகாரிகளால் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த சூழல், இன்று காலை மீண்டும் கைதிகளின் திட்டமிட்ட தாக்குதலால் சீர்குலைந்தது.

இதனையடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் வேறு சிறைசாலைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் கைதிகளின் உறவினர்கள் வீதிகளில் அழுதபடி உறவினர்கள் நிற்கும் புகைப்படங்க்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன் விரையும் அம்பியுலன்ஸ் வண்டிகளும், பாதுகாப்பு படையினரையும் நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதேசத்தில் காணக்கூடியதாக உள்ளது.