நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த மோதலில் இரு கைதிகள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மே…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மோதலில் இரு கைதிகள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் கடத்தல்
அத்துடன், காயமடைந்த கைதிகளில் மேலும் 10 பேருக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய காயமடைந்தவர்கள் அதே வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) அழைக்கப்பட்டுள்ளனர்.

