நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (05) பிற்பகல் சுமார் 1.00 மணியளவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (05) பிற்பகல் சுமார் 1.00 மணியளவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், தற்போது அங்கு மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.