நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று பிற்பகல் (05) இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே வெடித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த பத்து கைதிகளுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த மோதலின் காரணமாக இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 38 கைதிகள் தற்போது வைத்தியசாலையில் சிகிச…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று பிற்பகல் (05) இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே வெடித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த பத்து கைதிகளுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த மோதலின் காரணமாக இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 38 கைதிகள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது.கவலைக்கிடமான நிலையில் கைதிகள்

இந்த மோதலில் இதுவரை இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்த இரண்டு கைதிகள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் 10 கைதிகளுக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலின்போது காயமடைந்த ஏனைய கைதிகள் அதே வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் சிறை அதிகாரிகள் உள்ளடங்களாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 பேர் வரையானோர் கடும் படுகாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.