நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே சற்றுமுன் ஏற்பட்ட அமைதியின்மையால் 16 பேர் காயமடைந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. முதலாம் இணைப்புநீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவ…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே சற்றுமுன் ஏற்பட்ட அமைதியின்மையால் 16 பேர் காயமடைந்துள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. முதலாம் இணைப்புநீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5) ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.பதற்றம்

இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.