நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போதைக்கு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போதைக்கு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.மோதலுடன் தொடர்புடைய முக்கிய கைதிகள் மோதலுடன் தொடர்புடைய முக்கிய கைதிகள் மூவர் சிகிச்சையளிக்கப்பட்டதன் பிறகு பல்லன்சேன முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நேற்று பிற்பகல் (05) நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதி குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, முதலில் பெண் கைதிகள் குழு ஒன்று சிறைக் கட்டிடத்தின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.இதன் விளைவாக, கைதிகள் குழு தங்கியிருந்த கட்டிடங்களில் ஒன்றின் கூரை பிற்பகலில் திடீரென இடிந்து வீழ்ந்ததில் நான்கு கைதிகள் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  'இன்று வரை நீர்கொழும்பு சிறைச்சாலையில் 2417 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புஇந்த நிலையில் சிறை அதிகாரிகள் தலையிட்டதால், சிறைக்குள் இருந்த நிலைமை தற்போது முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளதுடன், சிறைக்கைதிகளின் உதவியும் கிடைத்துள்ளது. மேலும், சிறைக்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெண் கைதிகள் உள்ள பிரிவில் சில பதற்றம் நிலவிய போதிலும், அதையும் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது பெண் கைதிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் இந்த சம்பவம் சிறைக் கைதிகளுக்கு இடையேயான ஒரு மோதல் மட்டுமே. அதிகாரிகளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கைதிகளின் உறவினர்கள் தேவையற்ற அச்சத்தையோ பீதியையோ ஏற்படுத்தக் கூடாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கைதிகளிடமிருந்து பல கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த கோரிக்கைகள் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கஜநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.