நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரமான மோதலால் தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்திருப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் இந்த சம்பவத்திற்கு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்ட…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கொடூரமான மோதலால் தாம் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்திருப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் இந்த சம்பவத்திற்கு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் (06.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.மனித உயிரிழப்புகளை நியாயப்படுத்த முடியாதுமேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலையில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மனித உயிரிழப்புகளை நியாயப்படுத்த முடியாது.மனித உயிரிழப்புகளால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்தது குறித்து அதிகாரிகள் முழுமையாக விசாரித்து, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும், எந்தவொரு தனிநபர் மீதும் பழி சுமத்துவதை விட, உண்மைகளைக் கண்டறிவதிலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதிலுமே தனது கவனம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.