நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழப்பமான சூழலில், கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்ததாகக் கருதப்படும் ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழப்பமான சூழலில், கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்ததாகக் கருதப்படும் ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில்  இடம்பெற்ற மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்திருந்தனர்.  நிலவிய அசாதாரண சூழல்   அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், தற்போது மீண்டும் பதற்றநிலை உருவாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. விசாரணை கைதிகள் (Remand prisoners) ஒரு தரப்பினருக்கும், தண்டனை பெற்றுச் சிறையில் உள்ள கைதிகள் மற்றொரு தரப்பினருக்கும் இடையே இந்த முரண்பாடு வெடித்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.